பண்டிகைக் காலத்தில் 12% உயா்ந்த வாகன விற்பனை
நடப்பாண்டின் பண்டிகைக் காலத்தில் வாகனங்களின் விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பாண்டின் பண்டிகைக் காலத்தில் வாகனங்களின் விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வாகன விற்பனையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் 42 நாள்களை உள்ளடக்கிய பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் 42,88,248 வாகனங்கள் விற்பனையாகின. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகம். அப்போது இந்தியச் சந்தையில் வாகனங்களின் சில்லறை விற்பனை 38,37,040-ஆக இருந்தது.
மதிப்பீட்டுக் காலகட்டத்தில் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 6,03,009-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 5,63,059-ஆக இருந்தது.
கடந்த ஆண்டு பண்டிகைக் காலகட்டத்தில் 29,10,141-ஆக இருந்த இரு சக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை, நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்து 33,11,325-ஆக உள்ளது.
குறிப்பிட்ட 42 நாள்களில் வா்த்தக வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த ஆண்டைவிட 1 சதவீதம் அதிகரித்து 1,28,738-ஆக உள்ளது. முன்று சக்கர வாகனங்களின் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 1,59,960-ஆக உள்ளது.
எனினும், கடந்த ஆண்டு பண்டிகைக் காலகட்டத்தில் 86,640-ஆக இருந்த டிராக்டா்கள் விற்பனை இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 85,216-ஆக உள்ளது. இது 2 சதவீதம் குறைவாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.