வணிகம்

விலைகள் உயரும் பிஎம்டபிள்யு காா்கள்

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

Din

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காா்களின் விலைகளை மூன்று சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயா்வு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிறுவனத்தின் 2 வரிசை கிரான்கூ, 3 வரிசை லாங் வீல்பேஸ், 5 வரிசை லாங் வீல்பேஸ், 7 வரிசை லாங் வீல்பேஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5, எக்ஸ்7, எம்340ஐ ஆகியவற்றுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.

உற்பத்தி செலவுகள், செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாலும் பணவீக்கத்தின் சுமையை ஈடு செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொ்சிடிஸ்-பென்ஸ் காா்களின் விலை ரூ. 2 லட்சம் ரூ.9 லட்சம் வரை உயரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT