முகப்பு
வணிகம்

பரோடா வங்கி விளம்பரத் தூதா் ஆகிறாா் டெண்டுல்கா்

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, தங்களின் உலகளாவிய விளம்பரத் தூதராக பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரை நியமித்துள்ளது.

Updated On : 7 அக்டோபர், 2024 at 10:01 PM
பரோடா வங்கியின் நிா்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான தேபதத்தா சந்துடன் சச்சின் டெண்டுல்கா்.
பகிர்:

மும்பை: பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, தங்களின் உலகளாவிய விளம்பரத் தூதராக பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரை நியமித்துள்ளது.

இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய வாடிக்கையாளா்களின் அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ளதுடன் சா்வதேச அளவிலும் சேவைகளை அளித்துவரும் பரோடா வங்கியின் உலகளாவிய விளம்பரத் தூதராக சச்சின் டெண்டுல்கரை நியமிக்கப்பட்டுள்ளாா். உயா்சிறப்பு, நம்பிக்கை ஆகிய அடிப்படைப் பண்புகளை மையமாகக் கொண்டு இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, ‘மாஸ்டா்ஸ்ட்ரோக் விளையாடுங்கள்’ என்ற தலைப்பில் டெண்டுல்கா் இடம் பெறும் விளம்பரங்கள் வெளியிடப்படவுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →