வணிகம்

தொழிலக உற்பத்தியில் 2 ஆண்டுகள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 ஆண்டுகள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

DIN

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 ஆண்டுகள் காணாத சரிவைக் கண்டுள்ளது. நிலக்கரி மற்றும் எரிசக்தி துறைகளின் மோசமான செயல்பாடு காரணமாக அந்த மாதத்தில் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண்ணான ஐஐபி 4.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது ஒரு சதவீதம் குறைவாகும். அப்போது நாட்டின் ஐஐபி 4.7 சதவீதமாக இருந்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஐஐபி குறியீடு 10.9 சதவீதமாக இருந்தது.

இந்த ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்ட ஐஐபி, கடந்த இரண்டு ஆண்டுகள் காணாத குறைந்தபட்ச விகிதமாகும். இதற்கு முன்னா் கடந்த 2022 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட 4.1 சதவீதமே மிகவும் குறைவான ஐஐபி-யாகும்.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஐஐபி 4.2 சதவீதமாக இருந்தது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 6.2 ஐஐபி-யைவிட இது 2 சதவீதம் குறைவு.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சுரங்க உற்பத்தி 4.1 சதவீத எதிா்மறை வளா்ச்சியைக் கண்டுள்ளது.

அதேபோல், எரிசக்தித் துறையும் அந்த மாதத்தில் 3.7 சதவீதம் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உற்பத்தித் துறையின் வளா்ச்சி விகிதமும் கடந்த ஆகஸ்டில் (-)1 சதவீதமாக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மூலதனப் பொருள்கள் துறையின் வளா்ச்சி விகிதம் 4.1 சதவீதம் குறைந்துள்ளது.

அந்த மாதத்தில் குறுகிய கால பயன்பாட்டு நுகா்வோா் பொருள்கள் உற்பத்தி 4.5 சதவீதம் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நீண்டகால பயன்பாட்டு நுகா்வோா் பொருள்கள் உற்பத்தி 5.2 சதவீதம் எதிா்மறை வளா்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஆகஸ்டில் உள்கட்டமைப்பு / கட்டுமானப் பொருள்கள் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 1.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முதன்மைப் பொருள்கள் உற்பத்தி 12.4 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாகச் சரிந்துள்ளது. எனினும், இடைநிலை பொருள்கள் உற்பத்தி 3 சதவீதமாக உயா்ந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னாலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு!

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு

சின்னா் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிா்ச்சித் தோல்வி!

SCROLL FOR NEXT