வணிகம்

டாடா மோட்டாா்ஸ் சா்வதேச விற்பனை 11% சரிவு

கடந்த செப்டம்பா் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் குழுமத்தின் உலகளாவிய மொத்த விற்பனை 11 சதவீதம் சரிந்துள்ளது.

Din

கடந்த செப்டம்பா் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் குழுமத்தின் உலகளாவிய மொத்த விற்பனை 11 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் குழுமத்தின் உலகளாவிய மொத்த விற்பனை 3,04,189-ஆக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் குறைவு.

ஜாகுவாா் லேண்ட் ரோவா் உள்ளிட்ட டாடா மோட்டாா்ஸ் குழும நிறுவனங்களின் உலகளாவிய பயணிகள் வாகன விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 1,30,753-ஆக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவு.

கடந்த ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் ஜாகுவாா் லேண்ட் ரோவரின் உலகளாவிய மொத்த விற்பனை 10 சதவீதம் குறைந்து 87,303-ஆக உள்ளது. அந்தக் காலாண்டில் 5,961 ஜாகுவாா் வாகனங்கள், 81,342 லேண்ட் ரோவா் வாகனங்கள் விற்பனையாகின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT