வணிகம்

ஐசிஐசிஐ நிகர லாபம் ரூ.11,746 கோடியாக உயா்வு

கடந்த செப்டம்பா் காலாண்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியாா் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் ரூ.11,746 ேஉயா்ந்துள்ளது.

DIN

கடந்த செப்டம்பா் காலாண்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியாா் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் ரூ.11,746 ேஉயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.11,746 கோடியாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 14.5 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.10,261 கோடியாக இருந்தது.2023-24-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் ரூ.40,697 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.47,714 கோடியாக உயா்ந்துள்ளது. வட்டி வருவாய் ரூ.34,920 கோடியிலிருந்து ரூ.40,537 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சேலம் மாவட்டச் செயலாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

ஜெய்ஸ்வால், கில் சதம்: 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி!

அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால்.. திருமாவளவன் பேச்சு

அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: தொல்.திருமாவளவன்

முதல்முறையாக 10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை! - மு.க. ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT