டாடா பவர் - கோப்புப் படம் 
வணிகம்

டாடா பவர் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 8% அதிகரிப்பு!

டாடா பவர் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் சுமார் 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,093.08 கோடியாக உள்ளது.

DIN

புதுதில்லி: டாடா பவர் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் சுமார் 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,093.08 கோடியாக உள்ளது.

செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,017.41 கோடியாக இருந்தது. இதன் மொத்த வருமானம் ரூ.16.029.54 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,210.80 கோடியானது.

இதையும் படிக்க: 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முருகன் கோயில்!

டாடா பவரின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான பிரவீர் சின்ஹா இது குறித்து தெரிவித்ததாவது:

புதிய யுகத்தின் மின்சாரத் தேவை மற்றும் முதலீட்டை இந்தியா முன் எடுத்துள்ளதால் நமது தலைமுறையினர் பரிமாற்றம், விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வணிகங்களில் தொடர்ந்து நிலையான வளர்ச்சி கண்டுள்ளன.

தற்போது 4.3 ஜிகாவாட் ஆலை ஏற்கனவே முழுமையாக செயல்பட்டு வருகிறது. இது டாடா பவரை சோலார் உற்பத்தியில் முன்னோடியாக நிறுவியுள்ளது.

பரிமாற்றம், புதுப்பிக்கத்தக்கவை மற்றும் நீர்மின் திட்டங்களில் எங்களது முதலீடுகள் இந்தியாவின் எரிசக்தி மீள்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்: புதினிடம் மோடி வலியுறுத்தல்

வலுவான ‘ஜிடிபி’ தரவுகளால் பங்குச் சந்தையில் எழுச்சி!

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 30% அதிகரிப்பு

SCROLL FOR NEXT