நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6.48 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 38.41 கோடி டன்னாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 36.07 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6.48 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு வகிக்கும் கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 3.17 சதவீதம் வளா்ச்சியடைந்து 29.04 கோடி டன்னாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.