வணிகம்

ஆப்பிள் ஐஃபோன் 16 மாடல் அறிமுகம்: இந்தியாவில் எப்போது விற்பனை?

நவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் ஆப்பிள் நிறுவன ஐஃபோன் 16 மாடல் அறிமுகம்!

இணையதளச் செய்திப் பிரிவு

நவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 16 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் திங்கள்கிழமை(செப். 9) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஐஓஎஸ் 18 இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஐஃபோன் 16 மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள், முந்தைய ஐஃபோன் மாடல்களைவிட மேம்பட்ட கேமரா, தொடுதிரை மற்றும் ஒலித்தரத்தை கொண்டுள்ளன.

நவீன ஆப்பிள் இண்டலிஜன்ஸ் தொழில்நுட்பம் புது மாடல் ஐஃபோன்களில் உள்ளது கூடுதல் சிறப்பு.

ஐஃபோன் 16 மாடல்களில் உள்ள விசுவல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம், நாம் எடுக்கும் புகைப்படம் குறித்த தகவல்களை உடனடியாகப் பெற முடியும் கொடுக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது இந்த புதிய தொழில்நுட்பம்.

ஐஃபோன் 16 மாடல்களில் பக்கவாட்டில், கேமரா கட்டுப்பாட்டுக்கென நகர்த்திவிடும் பட்டனும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி புகைபடங்களை படம்பிடிக்கும் முன்பு, தேவையான அளவுக்கு, அதிகபட்சமாக 5 மடங்குக்கு ஸூம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஃபோன் மாடல்கள் விலைப் பட்டியல் மற்றும் அம்சங்கள்:

ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ்

ஆரம்ப விலை(256 ஜிபி) - ரூ. 1,44,900

தொடுதிரை அளவு - 6.9 இன்ச்

ஐஃபோன் 16 ப்ரோ

ஆரம்ப விலை(128 ஜிபி) - ரூ. 1,19,900

தொடுதிரை அளவு - 6.3 இன்ச்

இவ்விரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் ஏ18 ப்ரோ சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக மிகச்சிறந்த தொடுதிரைகளைப் பெற்றுள்ளதும் கூடுதல் சிறப்பம்சம்.

மிக வேகமான குவாட் பிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ள, 48 எம்பி ஃபியூசன் கேமரா இந்த ஐஃபோன்களில் உள்ளது. இந்த கேமராவில், 4கே - விநாடிக்கு 120 பிரேம்(120 எஃப்பிஎஸ்) தரத்தில் விடியோ பதிவு செயயலாம்.

இந்த ஐஃபோன்கள் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி சேமிப்பு தரத்துடன் விற்பனைக்கு வரவுள்ளன.

இவ்விரண்டு ஸ்மார்ட்ஃபோன் மாடல்களும் செப். 20 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளன. செப். 13 முதல் இதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஃபோன் 16

ஆரம்ப விலை(128 ஜிபி) - ரூ. 79,900

ஐஃபோன் 16 ப்ளஸ்

ஆரம்ப விலை(128 ஜிபி) - ரூ. 89,900

இவ்விரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் ஏ18 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரக ஐஃபோன்கள் விளையாட்டுகளுக்கு 30 சதவிகிதம் மேம்பட்ட திறனை வழங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடல்களைவிட அதிக திறன் வாய்ந்த பேட்டரியுடன் இந்த ஐஃபோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதும் கூடுதல் சிறப்பம்சம்.

ஆப்பிள் வாட்ச் 10 மாடல்கள்

ஆரம்ப விலை - ரூ. 46,900

முந்தைய ஆப்பிள் வாட்ச் மாடல்களைவிட 10 சதவிகிதம் மெல்லியதாய் வமைக்கப்பட்டுள்ளதும், இதுவரை வெளியான ஆப்பிள் வாட்ச் மாடல்களில், இதுவே அதிவேகமாக சார்ஜ் ஏறும் திறன் பெற்றிருப்பதும் கூடுதல் சிறப்பம்சம். 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 சதவிகிதம் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் என்று ஆப்பிள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

பரந்த ஓ-எல்இடி தொடுதிரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் 10 மாடல்கள் செப். 20 முதல் விற்பனைக்கு வர உள்ளன.

விளையாட்டு வீரர்களுக்கென மேம்பட்ட அம்சங்களுடன் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள்.

ஏர் பாட் 4 மாடல்கள்

ஆரம்ப விலை - ரூ. 12,900

இவை செப். 20 முதல் விற்பனைக்கு வர உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT