2024-25 பருவத்திற்கான எத்தனால் விலையையும், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையையும் அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உணவு துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
எத்தனால் விலையை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ள நிலையில், இது குறித்து பெட்ரோலிய அமைச்சகமும் விவாதித்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 2019ல் பிப்ரவரியில் நிர்ணயம் செய்யபட்ட சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையில் எந்தவித மாற்றமுமின்றி கிலோவுக்கு ரூ.31-ஆக இருக்க வேண்டும் என்ற திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
பருவமழை காரணமாக 2024-25 (அக்டோபர் முதல் செப்டம்பர்) வரையான பருவத்தில் சர்க்கரை உற்பத்தி நன்றாக உள்ள நிலையில் 2022-23 (நவம்பர் முதல் அக்டோபர்) முதல் அரசால் நிர்ணயிக்கப்பட்ட எத்தனாலின் விலை, பிறகு உயர்த்தப்படவில்லை.
தற்போது, கரும்பு சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் லிட்டருக்கு ரூ.65.61 ஆகவும், பி-ஹெவி மற்றும் சி-ஹெவி மொலாசஸிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கான விலை முறையே லிட்டருக்கு ரூ.60.73 மற்றும் ரூ.56.28-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.