ஜியோ கோப்புப் படம்
வணிகம்

2024-ல் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ!

2024ஆம் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

DIN

2024ஆம் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இணைய வேகத்தையும் தொலைத்தொடர்பு அலைவரிசையையும் கணக்கிட்டுவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓக்லா நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் ஜியோ சிறந்த நிறுவனமாகத் தேர்வாகியுள்ளது.

இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது ஜியோ நிறுவனம்.

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுவரும் இந்நிறுவனம், மற்ற போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டில் அதிவேக இணைய சேவையை வழங்கியுள்ளது. குறிப்பாக 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சீரான வேகத்தில் சேவையை அளித்துள்ளது.

அதிவேக இணைய சேவை

ஓக்லா நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜியோ இணைய சேவையில் 258.54 Mbps வேகத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 14.54 Mbps வேகத்தில் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதனால், 2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் சிறந்த சேவையை வழங்கிய நிறுவனமாக ஜியோ தேர்வாகியுள்ளது.

அதிவேக இணைய சேவைக்காக மட்டுமல்லாமல், பரந்த அளவிலான பயனர்களுக்கு இதே தரத்திலான சேவையை வழங்கியதும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, ஜியோ நிறுவனம் அதிவேக இணைய சேவையை வழங்கியுள்ளது.

இதேபோன்று ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவையில் சீராக விடியோ பார்க்க முடிந்துள்ளதாகவும், இணைய விளையாட்டுகளுக்கு சிறந்ததாக ஏர்டெல் சேவை இருந்துள்ளதாகவும் ஓக்லா குறிப்பிட்டுள்ளது.

மேலும், நிலைத்த இடங்களில் (பிராட்பேன்ட் மூலம் மட்டும்) இணைய சேவையை மட்டும் வழங்கிவரும் எக்ஸைட்டல் நிறுவனமும் இப்பட்டியலில் இணைந்துள்ளது.

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் சேவையில், 117.21 Mbps வேகத்தில் தரவுகளை பதிவிறக்கமும், 110.96 Mbps வேகத்தில் தரவுகளை பதிவேற்றமும் செய்ய முடிந்துள்ளது. எனினும், ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடாஃபோன் - ஐடியா நிறுவனங்களை ஒப்பிடும்போது குறைவான இடங்களிலேயே எக்ஸைட்டல் காணப்படுகிறது.

இதையும் படிக்க | ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!

இதையும் படிக்க | தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! எப்படி? ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT