வணிகம்

உ.பி.யில் 3 அரைவை இயந்திரத்தை நிறுவிய ஸ்ரீ சிமெண்ட்!

ஸ்ரீ சிமென்ட், உத்தர பிரதேசத்தில் உள்ள எட்டாவில், ஆண்டுக்கு 30 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட அலகை ஒன்றைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: முன்னணி சிமென்ட் உற்பத்தியாளரான ஸ்ரீ சிமென்ட், உத்தர பிரதேசத்தில் உள்ள எட்டாவில், ஆண்டுக்கு 30 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட புதிய அலகை ஒன்றைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பங்கூர் குடும்ப நிறுவனம் ரூ.850 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இதன் மூலம் 500 க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

ரயில்வே உள்கட்டமைப்புக்கு அருகில் அமைந்துள்ள இந்த இருப்பிடம், ராஜஸ்தானிலிருந்து மூலப்பொருட்களை குறைந்த செலவில் எடுத்து செல்ல உதவும். அதே நேரத்தில் சிமென்ட் அனுப்புதல் சாலை மற்றும் ரயில்வே மார்கமாகவும் தொடரும் என்று தெரிவித்துள்ளது.

கூடுதலாக, இந்த ஆலை அருகிலுள்ள ஜவஹர்பூர் அனல் மின் நிலையத்துடன் இணைந்து அதன் 100 சதவிகித சாம்பல் கழிவுகளை பயன்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் வளர்ச்சி குறித்து அதன் நிர்வாக இயக்குநர் நீரஜ் அகௌரி கூறுகையில், ஸ்ரீ சிமெண்ட், உத்தர பிரதேசத்தில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டை ஆதரிக்க உதவும் என்றார்.

இதையும் படிக்க: ஏப்ரல் 8 முதல் ரூ.62,000 வரை விலையை உயர்த்தும் மாருதி சுசூகி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலையாளத்தில் முதல்முறை... ரூ.300 கோடியைத் தாண்டிய லோகா!

மதராஸி ப்ளாக்பஸ்டரா? ஏ. ஆர். முருகதாஸை சீண்டிய சல்மான் கான்!

வங்கி மோசடி: 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

ஊழியர்களே எச்சரிக்கை! 'பாஸ்' என்று கூறி ஆள்மாறாட்ட மோசடி!

எல்பிஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது!

SCROLL FOR NEXT