முகப்பு
வணிகம்

மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!

மகாத்மா காந்தி வரிசையில் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

Updated On : 4 ஏப்ரல், 2025 at 12:10 PM
ரிசர்வ் வங்கி
பகிர்:

மும்பை: மகாத்மா காந்தி வரிசையில் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

இந்த தாள்களின் வடிவமைப்பு மகாத்மா காந்தி வரிசையில் தற்போது உள்ள ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை போலவே உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள தாள்களும் வழக்கம்போல் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம், ரிசர்வ் வங்கி ஆளுநர் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள தாள்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.

நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிந்த பிறகு, பதவியிலிருந்து விலகிய சக்திகாந்த தாஸுக்கு பதிலாக மல்ஹோத்ரா 2024 டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றார்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.85.25 ஆக முடிவு!

முழு கட்டுரையைப் படிக்க →