பங்குச்சந்தை வணிகம் கடும் சரிவுடன் தொடக்கம் 
வணிகம்

கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.

DIN

வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரிப்பதை அறிவித்த நிலையில் அவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இதனால், வா்த்தகப் போர் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் உலகளவில் பங்குச்சந்தைகளில் இதன் தாக்கம் எதிரொலித்து வருகின்றது.

இதனால், இந்திய பங்குச்சந்தையும் கடுமையான பாதிப்பைச் எதிர்கொண்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வார முடிவில் 75,364.69 புள்ளிகளில் இருந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட 4,000 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளில் தொடங்கியது.

இன்று காலை 9.40 மணியளவில் சென்செக்ஸ் 72648.17 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி கடந்த வார முடிவில் 22904.45 புள்ளிகளில் இருந்த நிலையில் இன்று 1200 புள்ளிகள் வரை குறைந்து 21,743.65 வர்த்தகமானது.

இன்று காலை 9.40 மணியளவில் நிஃப்டி 22088.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பெரும்பாலான பங்குகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள சந்தைகளும் சரிவிலேயே தொடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

SCROLL FOR NEXT