இந்தியாவில் ஜியோமி க்யூஎல்இடி எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
43 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று வகையான டிஸ்பிளேக்களுடன் ஜியோமியின் புதிய ஸ்மார்ட் டிவி விற்பனை செய்யப்படவுள்ளன.
சிறப்பம்சங்கள்
4கே ரெசல்யூசன் (2,160x3,840 பிக்சல்கள்)
178 டிகிரி பார்வைக் கோணம்
குவாட் கோர் ஏ5 சிப்
2 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ்
காட்சி வண்ணங்களை மேம்படுத்தும் மேஜிக்யூ தொழில்நுட்பம்
டால்பி விஷன் தொழில்நுட்பம்
43 இன்ச் டிவிக்கு 30 வாட் ஸ்பீக்கரும், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிவிக்களுக்கு 34 வாட் ஸ்பீக்கரும் உள்ளது
கூகிள் குரல் செயலி உள்ளது, இதன்மூலம் குரலொலி மூலம் டிவியை இயக்க முடியும்
கிட்ஸ் மோட் - பேரண்ட் லாக் வசதி
இரண்டு யுஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜேக், எதெர்நெட் போர்ட் (இணையதள கேபிள்) வசதிகள்
விலை
43 இன்ச் ரூ. 31,999
55 இன்ச் ரூ. 44,999
65 இன்ச் ரூ. 64,999
வருகின்ற ஏப்ரல் 16 முதல் ஃபிளிப் கார்ட் மற்றும் ஜியோமி விற்பனை தளங்களில் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.