நிதி கைஸ்தா 
வணிகம்

லம்போர்கினி இந்திய தலைவராக நிதி கைஸ்தா நியமனம்!

இத்தாலியை சேர்ந்த, சூப்பர் சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, இந்தியாவின் தலைவராக, நிதி கைஸ்தாவை நியமித்துள்ளது.

DIN

புதுதில்லி: இத்தாலி சூப்பர் சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, இந்தியாவின் தலைவராக, நிதி கைஸ்தாவை நியமித்துள்ளது.

தனது புதிய பொறுப்பில், ஆறாவது பெரிய சந்தையான இந்தியாவில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய செயல்பாடுகளை கைஸ்தா மேற்பார்வையிடுவார் என்று லம்போர்கினி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விருந்தோம்பல், விமானப் போக்குவரத்து மற்றும் வாகனத் தொழில்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், அவர் தனது புதிய பதவிக்கு விரிவான நிபுணத்துவத்தையும் தலைமைத்துவத்தையும் கொண்டு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத் துறையில் நிதி கைஸ்தாவுக்கு ஏராளமான அனுபவம் தன்வசம் வைத்து உள்ள நிலையில், அவர் பார்வையில் எங்கள் வளர்ச்சி மேலும் ஊக்குவிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார் லம்போர்கினி ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குநர் பிரான்செஸ்கோ.

இதற்கிடையில், லம்போர்கினியின் மகத்தான வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட சந்தையாக இந்தியா தொடர்ந்து உள்ள நிலையில் எங்கள் இருப்பை வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான அனுபவங்களை வழங்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

லம்போர்கினி தற்போது மும்பை, புதுதில்லி மற்றும் பெங்களூருவில் மூன்று டீலர்ஷிப்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனது தடத்தை விரிவுபடுத்துவதற்கும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் உயர்த்துவதற்கும் நாங்கள் தொடர்ந்து வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

இதையும் படிக்க:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT