ஏசஸ் எக்ஸ்பர்ட் புக் ஏசஸ்
வணிகம்

ஏசஸ் அறிமுகப்படுத்தும் 3 புதிய மடிக்கணினிகள்!

எக்ஸ்பர்ட் புக் பி-1, எக்ஸ்பர்ட் புக் பி-3, எக்ஸ்பர்ட் புக் பி-5 என மூன்று வகை மடி

DIN

இந்திய சந்தையில் ஏசஸ் நிறுவனம் புதிதாக 3 மடிக்கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த 3 மடிக்கணினிகளும் 13ஆம் தலைமுறையைச் (13வது ஜெனரேஷன்) சேர்ந்தவை.

எக்ஸ்பர்ட் புக் பி-1, எக்ஸ்பர்ட் புக் பி-3, எக்ஸ்பர்ட் புக் பி-5 என மூன்று வகைகளில் மடிக்கணினிகளை அறிமுகம் செய்துள்ளதால், ஏசஸ் நிறுவனத்தில் தங்களுக்குத் தேவையான அம்சங்களை உள்ளடக்கிய மடிக்கணினியை தேர்வு செய்துகொள்ளலாம்.

ஏசஸ் எக்ஸ்பர்ட் புக் சிறப்பம்சங்கள்

ஏசஸ் எக்ஸ்பர்ட் புக் பி-1 மடிக்கணினியானது 13ஆம் தலைமுறை இன்டல் கோர் ஐ-3 புராசஸர் கொண்டது. 8ஜிபி அளவில் (மென்பொருள்களுக்கானது) நினைவகத் திறன் உள்ளடக்கியது.

இரட்டை உள்ளீடு நினைவகத் தொகுதி கொண்டுள்ளதால் (DIMM) 64 ஜிபி (RAM) வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம். 512 ஜிபி (ROM) நினைவகத் திறன் கொண்டது. வின்டோஸ் 11-ன் மூலம் இயங்கும் திறன் கொண்டது.

எக்ஸ்பர்ட் புக் பி வரிசையில் வரும் அனைத்து மடிக்கணினிகளுமே நானோஎட்ஜ் வடிவமைப்புக் கொண்டது. இதனால் பக்கவாட்டுப் பகுதிகளில் பெரிதாக இல்லாமல், சிறியதாகவும், கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

14 அங்குலம், 15.6 அங்குலம் என இரு வேறு அளவுகளில் திரைகளைக் கொண்டுள்ளன. எது வேண்டுமோ அதனைத் தேர்வு செய்து வாங்கலாம்.

178 டிகிரி வரை திரையின் பார்வை சிறப்பானதாக இருக்கும்.

கண்ணைக் கூசும் எதிரொலி போன்றவை இருக்காது. அதனைக் கட்டுப்படுத்தும் திறன் (300நிட்ஸ்) கொண்டதாகவே வருகிறது.

19.7 அங்குல தடிமன். 1.4 கிலோ எடை இதன் சிறப்பம்சங்களில் முக்கியமானது.

வெப்பம் சேரா தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், பயன்பாட்டின்போது வெப்பம் வெளியேற்றுவது குறைவு.

தூசு படிவது முற்றிலும் தவிர்க்கும் வகையில் மென் வலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள் பயன்பாட்டில் தூசு ஏற்பட்டாலும், வலையை எடுத்து சுத்தம் செய்துகொண்டாலே போதும்.

மடிக்கணினியை 49 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் செய்து விடலாம். 8 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க | 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த சில்லறை பணவீக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!

மத்திய துணை ராணுவப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

திராட்சை ரசம்... சௌந்தர்யா ரெட்டி!

போக்குவரத்துக் காவலர் மீது ஸ்கூட்டியை மோதிய நபர்! சிசிடிவி விடியோ வைரல்!

20 வது பிறந்தநாள் கொண்டாடிய பிக் பாஸ் ஜோவிகா!

SCROLL FOR NEXT