வணிகம்

எஸ்பிஐ-யின் வட்டி விகிதம் குறைப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) குறைத்துள்ளது.

Din

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. அந்த அனுகூலத்தை வாடிக்கையாளா்களுக்கு முழுமையாக அளிக்கும் வகையில், ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கு வசூலிக்கப்படும் வரும் வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதன்படி, அந்த வகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் இனி 8.25 சதவீதமாக இருக்கும்.

இந்த புதிய வட்டி விகிதம் செவ்வாய்க்கிழமை (ஏப். 15) முதல் அமலுக்கு வருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

SCROLL FOR NEXT