கோப்புப் படம். 
வணிகம்

தொடர்ந்து 4-வது நாளாக சென்செக்ஸ் 1,509 புள்ளிகளும், நிஃப்டி 414 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!

சென்செக்ஸ் 1,508.91 புள்ளிகள் உயரந்து 78,553.20 புள்ளிகளுடனும் நிஃப்டி 414.45 புள்ளிகள் உயர்ந்து 23,851.65 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

DIN

அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த நேர்மறையான சமிக்ஞையால், தொடர்ந்து 4வது நாளாக இன்றும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தது. சென்செக்ஸ் 78,553.20 புள்ளிகளும், நிஃப்டி 23,851.65 புள்ளிகளுடனும் உயர்ந்து முடிந்தது சாதனை படைத்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,572.48 புள்ளிகள் உயர்ந்து 78,616.77 புள்ளிகளுடனும், நிஃப்டி 414.45 புள்ளிகளுடன் 23,851.65 புள்ளிகளுடன் இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,508.91 புள்ளிகள் உயரந்து 78,553.20 புள்ளிகளுடனும் நிஃப்டி 414.45 புள்ளிகள் உயர்ந்து 23,851.65 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

நிஃப்டி-யில் வங்கி குறியீடு இன்று நாள் முழுவதும், கணிசமான ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில் முடிவில் அதன் குறியீடு 54,290.20 ஆக முடிவடைந்தது 2.21% கணிசமான லாபத்தை பதிவுசெய்தது. இது அதிகபட்சமாக 54,407.20 என்ற புள்ளிகள் சென்று பிறகு குறைந்தபட்சமாக 53,084.90 புள்ளிகளை தொட்டது. இது இன்றைய வர்த்தகத்தில் அதன் 52 வார அதிகபட்சமான 54,467.35 புள்ளிகளை பதிவு செயத்தது குறிப்பிடத்தக்கது.

டெலிகாம், பொதுத்துறை வங்கி, ஆயில் & கேஸ், பார்மா, ஆட்டோ, எனர்ஜி, பிரைவேட் பேங்க் ஆகியவை 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது. இருப்பினும், விப்ரோவின் எச்சரிக்கையான கண்ணோட்டம் காரணமாக ஐடி குறியீடு அழுத்தத்திலிருந்த நிலையில், சற்று நேரத்தில் மீண்டு 0.2 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதாக தெரிவித்த நிலையில், சீனாவிற்கான என்விடியா சிப் ஏற்றுமதிகள் குறித்த புதிய தடை மற்றும் கடுமையான கட்டணங்கள் குறித்த எச்சரிக்கையால் அமெரிக்க பங்குகள் வெகுவாக சரிந்து முடிந்தது.

பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மா, எடர்னல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், டெக் மஹிந்திரா, கோல் இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் நிஃப்டி-யில் சரிந்து முடிந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எடர்னல், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், சன் பார்மா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பின்சர்வ், கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் டெக் மஹிந்திரா மற்றும் மாருதி ஆகியவை சரிந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (புதன்கிழமை) ரூ.3,936.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அன்று எஃப்ஐஐ-கள் ரூ.6,065.78 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, டோக்கியோவின் நிக்கேய் - 225, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்தும் ஐரோப்பிய சந்தைகள் சரிந்தும் முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (புதன்கிழமை) கணிசமாக சரிந்து முடிந்தது.

பங்குகள் சார்ந்த நடவடிக்கையில், பலவீனமான கண்ணோட்டத்தில் விப்ரோ பங்கு விலை 4 சதவிகிதம் சரிந்ததும், சொனாட்டா சாப்ட்வேர் பங்குகள் சர்வதேச வணிகத்திலிருந்து குறைந்த வருவாயை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பால் 6 சதவிகிதமும் சரிந்தது. அதே வேளையில் வாரி ரினியூவபிள் டெக்னாலஜிஸ் அதன் 4-வது காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 8 சதவிகிதமும் உயர்ந்து முடிந்தது.

பார்தி ஹெக்ஸாகாம், நாராயணா ஹிருதயாலயா, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், சம்பல் பெர்டிலைசர்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், எஸ்பிஐ கார்டுஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட 80 பங்குகள் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

புனித வெள்ளியை முன்னிட்டு நாளை ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை) சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நச்... கங்கனா சர்மா!

சென்னையில் Gaming திருவிழா! | Chennai Trade Center | Gamer's Hub | BGMI | PUBG | FIFA | REDBULL

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் 67,800 போலி வாக்காளர்கள்? -தேர்தல் ஆணையம் மறுப்பு

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?

SCROLL FOR NEXT