மும்பை: இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி 50 குறியீடு 0.06% உயர்ந்து 25,496.55 ஆகவும், சென்செக்ஸ் 0.03% சரிந்து 82,248.61 புள்ளிகளாக நிலைபெற்றது.
இன்றைய ஏற்ற-இறக்க வர்த்தகத்தில், பங்குச் சந்தை நாள் முழுவதும் குறுகிய வரம்பில் வர்தகமான நிலையில், விற்பனையின் அழுத்தத்தால், நிஃப்டி இன்ட்ராடே வர்த்தகத்தில் 25,400 புள்ளிகளாக வர்த்தகமான நிலையில், பொதுத்துறை வங்கி, சுகாதாரம் மற்றும் ஆட்டோ பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், நிஃப்டி குறியீடு சரிந்த நிலைகளிலிருந்து மீண்டு 14.05 புள்ளிகள் உயர்ந்தன.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 27.46 புள்ளிகள் சரிந்து 82,248.61 ஆகவும், நிஃப்டி 14.05 புள்ளிகள் உயர்ந்து 25,496.55 புள்ளிகளாக நிலைபெற்றது. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.6% உயர்ந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடு சமமாக முடிவடைந்தன.
சென்செக்ஸில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், மாருதி சுசுகி ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் பவர் கிரிட் கார்ப்பரேஷன், டிரென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எடர்னல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 3,257 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,686 பங்குகள் உயர்ந்தும் 1,455 பங்குகள் சரிந்தும் 116 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
துறை வாரியாக ஆட்டோ, பார்மா, எண்ணெய் & எரிவாயு, பொதுத்துறை வங்கி, தொலைத்தொடர்பு, உலோகம் 0.4 முதல் 1% அதிகரித்த நிலையில், மீடியா குறியீடு 0.7% சரிந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், அமெரிக்க மாநில போக்குவரத்து நிறுவனத்துடன் உள்ள உடன்பாடு ஒன்றால் எக்ஸ்டி குளோபல் பங்குகள் 20% உயர்ந்தன. பெரிய அளவிலான வெடிமருந்துகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாலு ஃபோர்ஜ் கையெழுத்திட்டதால் அதன் பங்குகள் 10% அதிகரித்தன.
லாபம் 10% உயர்ந்த நிலையில் கே.எஸ்.பி. பங்கு விலை 9% உயர்ந்தன. 56.2 லட்சம் பங்குகள் ஒரே பிளாக் டீலுக்கு பிறகு ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5% சரிந்தன. கேபிஐ கிரீனில் நிறுவனத்திடமிருந்து ரூ.93 கோடி மதிப்புள்ள ஈபிசி ஆர்டரை கையகப்படுத்தியதை அடுத்து டயமண்ட் பவர் பங்குகள் 3% உயர்ந்தன.
லூபின், பாங்க் ஆஃப் பரோடா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஜேபி கெமிக்கல்ஸ், ஹிட்டாச்சி எனர்ஜி, டோரண்ட் பார்மா, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், கிராஃபைட் இந்தியா, பாலிகேப், ஃபெடரல் வங்கி, யூனியன் வங்கி, டிவிஎஸ் மோட்டார், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கம்மின்ஸ், இந்தியன் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐஓசி, கனரா வங்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றயை வர்த்தகத்தில் 52 வார உச்சத்தை எட்டியது.
ரிலையன்ஸ் பவர், ஸ்வான் கார்ப், ஏடபிள்யூஎல் அக்ரி, ஐஆர்எஃப்சி, பிஏஎஸ்எஃப், அல்கைல் அமின்ஸ், சையண்ட் உள்ளிட்ட 320க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையை எட்டியது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.25 சதவீதம் உயர்ந்து 71.03 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.