நிஸ்ஸான் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகும் ரெனால்ட் தலைவர்!
நிஸ்ஸான் நிறுவனத்தின் சரிவைச் சமாளிக்கும் வகையில், அதன் இயக்குநர்கள் குழுவிலிருந்து ரெனால்ட் தலைவர் ஜீன்-டொமினிக் செனார்ட் விலக உள்ளதாக ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ: நிஸ்ஸான் நிறுவனத்தின் சரிவைச் சமாளிக்கும் வகையில், அதன் இயக்குநர்கள் குழுவிலிருந்து ரெனால்ட் தலைவர் ஜீன்-டொமினிக் செனார்ட் விலக உள்ளதாக ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார்.
நிஸ்ஸானின் துணைத் தலைவராகப் பணியாற்றிய செனார்ட், ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் பங்குதாரர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் முடிவில் ராஜினாமா செய்வார் என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு ரெனால்ட் பிரதிநிதியான ஃப்ளூரியட்டும் நிஸ்ஸானின் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் பதவி விலகும்போது, வாகன சப்ளையர் ஃபோர்வியாவின் குழுவில் பணியாற்றும் முன்னாள் கிரெடிட் சூயிஸ் நிர்வாகி வலேரி லாண்டன் மற்றும் நாடிக்சிஸில் நிர்வாகியாக இருந்த ரியான் ஆகியோர் குழுவில் இணைய பரிந்துரைக்கப்படுவார்கள்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிகர லாபம் 1.8% உயர்வு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.