வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.13-ஆக முடிவு!

டாலர் குறியீட்டில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியாலும் மற்றும் உள்நாட்டு பங்குகளின் எழுச்சியால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்து ரூ.85.13 ஆக முடிந்தது.

DIN

மும்பை: டாலர் குறியீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும், அதனை தொடர்ந்து உள்நாட்டில் பங்குகளின் தொடர் எழுச்சியால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்து ரூ.85.13 ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.15 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.03 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.19 ஐ தொட்ட நிலையில், முடிவில் 25 காசுகள் உயர்ந்து ரூ.85.13 ஆக முடிந்தது.

அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) அன்று 26 காசுகள் உயர்ந்து 85.38 ஆக இருந்தது.

புனித வெள்ளி முன்னிட்டு அந்நிய செலாவணி சந்தை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) அன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஐந்து வர்த்தக அமர்வுகளில், இந்திய ரூபாய் ஏப்ரல் 9 முடிவிலிருந்து 155 காசுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT