ஹெச்டிஎஃப்சி வங்கி 
வணிகம்

நாட்டின் 3வது பெரிய நிறுவனமாக மாறிய ஹெச்டிஎஃப்சி வங்கி!

இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ரூ.15 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், நாட்டில் மூன்றாவது பெரிய இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.

DIN

இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ரூ.15 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், நாட்டில் மூன்றாவது பெரிய இந்திய நிறுவனம் என்ற பெருமையை தட்டி சென்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இந்த இந்த மைல்கல்லை இதற்கு முன்பு எட்டியுள்ளது. அதே வேளையில் மார்ச் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி 2024-25 நிதியாண்டில், அதன் 4-வது காலாண்டு லாபம் 6.6 சதவிகிதம் அதிகரித்து ரூ.17,616 கோடியாகவும், இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.16,512 கோடியாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 1.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,962 க்கு வர்த்தகமானது. அதே வேளையில், அதன் மொத்த வருவாய் ரூ.89,639 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.89,488 கோடியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் வங்கியின் வட்டி வருமானம் ரூ.77,460 கோடியாக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் இது ரூ.71,473 கோடியாக இருந்தது.

மார்ச் 31, 2025 நிலவரப்படி, அதன் நிதி நிலை அளவானது ரூ.39.10 லட்சம் கோடியாக இருந்தது. இது மார்ச் 31, 2024 நிலவரப்படி ரூ.36.17 லட்சம் கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: 6-வது நாளாக உயர்ந்து முடிந்தது சென்செக்ஸ், நிஃப்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் கோயிலில் தங்கத்தோ் கிரி வீதி உலா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

நாசரேத் அருகே மேளக் கலைஞா் தற்கொலை

வெள்ளநீா் கால்வாய்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

SCROLL FOR NEXT