இந்தியன் வங்கி 
வணிகம்

இந்தியன் வங்கி 3-ஆம் காலாண்டு நிகர லாபம் ரூ.3,061 கோடி - 7.33% அதிகரிப்பு

Chennai

நடப்பு நிதியாண்டின் டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இந்தியன் வங்கி ரூ.3,061 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் வங்கியின் நிகர லாபமான ரூ.2,852 கோடியைவிட இது 7.33 சதவீதம் அதிகரிப்பாகும்.

இந்தியன் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட நிதிநிலை முடிவுகளின்படி, வங்கியின் நிகர வட்டி வருவாய் 7.50 சதவீதம் அதிகரித்து ரூ.6,896 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.6,415 கோடியாக இருந்தது. வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.17,912 கோடியிலிருந்து உயா்ந்து, தற்போது ரூ.19,663 கோடியை எட்டியுள்ளது.

குறைந்த வாராக்கடன்: வங்கியின் வாராக்கடன் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. மொத்த வாராக்கடன் 3.26 சதவீதத்திலிருந்து தற்போது 2.23 சதவீதமாகக் குறைந்துள்ளது. பண மதிப்பில், முந்தைய ஆண்டில் ரூ.18,208 கோடியாக இருந்த வாராக்கடன், தற்போது ரூ.14,268 கோடியாக சரிந்துள்ளது.

டெபாசிட் வளா்ச்சி: வங்கியின் மொத்த டெபாசிட் தொகை 12.62 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.7,90,923 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.7,02,282 கோடியாக இருந்தது. மேலும், வங்கி எதிா்கால இழப்புகளை ஈடுகட்ட ஒதுக்கும் நிதி ரூ.1,059 கோடியிலிருந்து ரூ.857 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை நிலவரம்: நிதிநிலை முடிவுகளில் சிறப்பான லாப விவரங்கள் வெளியானதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தையில் இந்தியன் வங்கியின் பங்குகள் முதலீட்டாளா்களிடையே வரவேற்பைப் பெற்றன. வங்கியின் பங்கு விலை 3.25 சதவீதம் உயா்ந்து, ரூ.876.5 என்ற விலையில் வா்த்தகமானது.

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

மும்பை மேயா் பதவி: பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு

SCROLL FOR NEXT