புதுதில்லி: தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, நிதியாண்டின் 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.68% குறைந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
கடந்த ஆண்டு 3வது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 12,883.37 கோடியாக இருந்தது. அதே வேளையில் நிதியாண்டின் 2வது காலாண்டில் இது ரூ.13,537.06 கோடியாக இருந்தது.
நாட்டின் 2வது பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.11,318 கோடியாக பதிவு செய்த நிலையில் கடந்த ஆண்டு இது ரூ.11,792 கோடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.