வணிகம்

மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயா்ந்துள்ளது.

Din

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,493 கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.1,218 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.6,488 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.7,711 கோடியாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.5,467 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.6,731 கோடியாக உயா்ந்துள்ளது.

ஓராண்டுக்கு முன்னா் 0.25 சதவீதமாக இருந்த வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் கடந்த மாா்ச் இறுதியில் 0.18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT