டிவிஎஸ் மோட்டாா் 
வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 69% உயா்வு

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 69 சதவீதம் உயா்ந்துள்ளது.

Din

புது தில்லி: கடந்த மாா்ச் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 69 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.698 கோடியாக உள்ளது.

இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 69 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.412 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.11,474 கோடியாக உயா்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.9,899 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT