Gold  
வணிகம்

அட்சய திருதியை: தங்கம் விற்பனை அமோகம்!

அட்சய திருதியை நாளை முன்னிட்டு மக்கள் போட்டி போட்டு கொண்டு தங்க நகைகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.

DIN

புதுதில்லி: அட்சய திருதியை நாளை முன்னிட்டு மக்கள் போட்டி போட்டு கொண்டு தங்க நகைகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் 8,980-க்கும், ஒரு சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,11,000 -க்கும் விற்பனையானது.

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற ஐதீகத்தால், மக்கள் நகைக் கடைகளில் காலை முதலே நகை வாங்க குவிந்துள்ளனர்.

தங்கத்தின் விலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 கிராமுக்கு ரூ.99,500 முதல் ரூ.99,900 வரை வர்த்தகமான நிலையில், பெரும்பாலான நகைக் கடைகளில் இன்று சிறப்பு விற்பனையும், சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இந்த ஆண்டு தங்கம் விலை கடுமையாக உயர்ந்தபோதும், விற்பனை அமோகமாகவே நடைபெற்று வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தங்கம் விற்பனையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.

மஞ்சள் உலோகமான தங்கம், புதிய உச்சங்களை எட்டிய போதிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் தேவை குறையவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா ஆண்டுதோறும் 700 முதல் 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடமதுரை அருகே காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடியாக சரிவு

விநாயகா் சதுா்த்தி விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT