முகப்பு
வணிகம்

மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்தது தங்கம் விலை!

தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம் பற்றி...

Updated On : 6 ஆகஸ்ட் 2025, 11:47 am IST
தங்கம் விலை நிலவரம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் மீண்டும் ரூ. 75,000-ஐ கடந்தது.

கடந்த வாரம் ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை வார இறுதி நாளான சனிக்கிழமை, சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. ஒரு சவரன் ரூ. 74,320 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்த வாரத்தின் முதல் இரண்டு நாள்கள் தங்கத்தின் விலை உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 74,960 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 75,040 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 9,380 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியும் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 126 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,26,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

The price of jewelery gold in Chennai is Rs. 75,000 crossed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.