வோடாஃபோன் ஐடியா கோப்புப் படம்
வணிகம்

அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அளவற்ற இணையம், அழைப்புகள்; ரெட்எக்ஸ் திட்டத்தை ரூ.1,601 விலையில் அறிமுகம் செய்தது விஐ.

இணையதளச் செய்திப் பிரிவு

பயனர்களுக்காக புதிய திட்டத்தை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரம்பற்ற தொலைத்தொடர்புகளைக் கொண்டிருக்கும் வகையில் ரெட்எக்ஸ் என்ற குடும்ப திட்டத்தை ரூ.1,601 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பிரீமியம் பயனர்களுக்காக இந்த சலுகையைக் கொண்டுவந்துள்ள வோடாஃபோன் ஐடியா நிறுவனம், மத்தியத்தர விலையில் வரம்பற்ற சேவைகளைப் பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

பயனர்களைத் தக்கவைக்கும் நோக்கத்தில், குறைந்த விலையில், அதிக பலன்கள் கொண்ட திட்டங்களை இந்நிறுவனம் அறிவித்து வருகிறது.

ரெட்எக்ஸ்

ரெட்எக்ஸ் திட்டத்தின் பலன்கள் என்ன?

  • வோடாஃபோன் ஐடியா ரெட்எக்ஸ் போஸ்ட்பெய்ட் குடும்பத் திட்டத்தின் விலை ரூ. 1,601. மற்ற குடும்ப திட்டங்களில் முதன்மை பயனர்கள் மட்டுமே அனைத்து பலன்களையும் பெற முடியும். இரண்டாம் நிலை பயனர்களுக்கு இணைய வேகம், தரவு கட்டுப்பாடு என சில வரம்புகள் இருக்கும்.

  • ஆனால், இந்தத் திட்டத்தில் முதல் நிலை பயனர்களும் இரண்டாம் நிலை பயனர்களும் ஒரே பலன்களைப் பெற முடியும்.

  • இதில், 4ஜி மற்றும் 5ஜி என இரு வகை பயனர்களும் அளவற்ற இணையம் மற்றும் அழைப்புகளைப் பெற முடியும்.

  • கூடுதலாக ஒவ்வொரு மாதத்திற்கும் 3 ஆயிரம் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

  • இத்துடன் ரூ.299 செலுத்தி, கூடுதலாக 7 நபர்களை இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அவர்களும் முதல்நிலை பயனர்கள் அனுபவிக்கும் சலுகைகளைப் பெறலாம்.

  • நெட்பிளிக்ஸ், அமேசான், சோனி லைவ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களை பார்க்கலாம்.

  • இவற்றுடன், பயனர்கள் அனைவரும் கூடுதலாக ஸ்விக்கி ஒன் சப்ஸ்கிரிப்ஷனையும் 6 மாதங்களுக்கு பெறலாம்.

  • ரெட் எக்ஸ் திட்டத்தை எடுத்டுக்கொள்ளும் பயனர்களுக்காக 24 மணிநேரமும் வாடிக்கையாளர்களுக்கான ஆதரவு மையம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

Vodafone Idea Launches Rs 1,601 REDX Family Plan with Unlimited 4G, 5G Data

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்!

SCROLL FOR NEXT