இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம். படங்கள்: மெட்டா
வணிகம்

எக்ஸில் இருப்பதுபோல... இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியிருக்கும் புதிய அம்சம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இன்ஸ்டாகிராமில் எக்ஸில் (ட்விட்டர்) இருப்பதுபோல ரீபோஸ்ட் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் என்ற செயலியில் உலகம் முழுவதும் 200 கோடி கணக்குகள் உள்ளன.

இந்தியாவில் மிகுந்த வளர்ச்சியடைந்த செயலியாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது.

தற்போது, எக்ஸில் (ட்விட்டர்) இருப்பதுபோல ரீபோஸ்ட் அம்சத்தை அறிவித்துள்ளது. அதில் எமோஜியைப் பதிவிட்டு சேமித்துக் கொள்ளவும் புதிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரீபோஸ்ட் அம்சம்...

லைக்ஸ், கமெண்ட், ரீபோஸ்ட், ஷேர் என்றவாறு இன்ஸ்டாகிராமில் இந்த புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் என்ன பயன்?

பப்ளிக்காக இருக்கும் உங்களுக்குப் பிடித்த ரீல்ஸ் அல்லது பதிவினை ரீபோஸ்ட் செய்தால் அது உங்களது நண்பர்களது ஃபீடில் வரும்.

உங்களது கணக்கில் பதிவுகள், ரீல்ஸுக்கு அருகில் ரீபோஸ்ட் என்ற தனி டேப் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டேபில் நீங்கள் என்னென்ன ரீபோஸ்ட் செய்துள்ளீர்கள் எனப் பார்த்துக் கொள்ளலாம்.

ரிபோஸ்ட் என்பது கலைஞர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என மெட்டா அறிவித்துள்ளது. உங்களது பதிவையோ அல்லது ரீல்ஸையோ ரீபோஸ்ட் செய்தால் அதைச் செய்த நபரின் நண்பர்களின் ஃபீடில் உங்களது பதிவை/ ரீல்ஸை இன்ஸ்டாகிராம் பரிந்துரைக்கும்.

இதனால், ஒருவர் உங்களைப் பின் தொடராவிட்டாலும் உங்களது பதிவு/ ரீல்ஸ் அதிகமான மக்களைச் சென்றடையும் என மெட்டா தெரிவித்துள்ளது.

Meta has introduced a repost feature on Instagram, similar to that on Twitter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பெருந்துயரம் - புகைப்படங்கள்

அகம் புறம்... மேகா சுக்லா!

விஜய் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு!

166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்! அறிமுகப் போட்டியில் 8 விக்கெட்டுகள்!

இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

SCROLL FOR NEXT