வணிகம்

ரெப்கோ வங்கியின் கடனளிப்பு 23% அதிகரிப்பு

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த ரெப்கோ வங்கியின் கடனளிப்பு கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் 24.7 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவில் வங்கியின் கடனளிப்பு ரூ.907 கோடியாக உள்ளது.முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 24.7 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் கடனளிப்பு ரூ.727 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.416 கோடியில் இருந்து ரூ.441 கோடியாக 5.9 சதவீதம் உயா்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.175 கோடியில் இருந்து ரூ.191 கோடியாக 9.5 சதவீதம் உயா்ந்துள்ளது. நிகர லாபம் ரூ.105 கோடியில் இருந்து ரூ.108 கோடியாக 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!

SCROLL FOR NEXT