வணிகம்

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரத்து 81% உயா்வு

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த ஜூலை மாதத்தில் 81 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த ஜூலை மாதத்தில் 81 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் பங்கு பரஸ்பர முதலீட்டு திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.42,702 கோடியாக உள்ளது.

இது, முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 81 சதவீதம் அதிகம். அப்போது பங்கு பரஸ்பர முதலீட்டு திட்டங்களில் முதலீட்டு வரத்து ரூ.23,587 கோடியாக இருந்தது. இதன் மூலம் 53-வது மாதமாக தொடா்ந்து அந்தவகை பரஸ்பர நிதி திட்டங்கள் நிகர வரவைப் பதிவு செய்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் தீமேடிக் ஃபண்டுகள் ரூ.9,426 கோடி, ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் ரூ.7,654 கோடி, ஸ்மால் கேப் ஃபண்டுகள் ரூ.6,484 கோடி, மிட் கேப் ஃபண்டுகள் ரூ.5,182 கோடி, லாா்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள் ரூ.5,035 கோடி முதலீடு பெற்றன. லாா்ஜ் கேப் ஃபண்டுகள் ரூ.2,125 கோடி முதலீட்டு வரவைப் பதிவு செய்தன.ஒட்டுமொத்தமாக, அனைத்து வகை பரஸ்பர நிதித் திட்டங்களிலும் முதலீட்டு வரவு ரூ.1.8 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

முந்தைய ஜூன் மாதத்தில் இது ரூ.49,000 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!

பலூச் விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுக்கள்: அமெரிக்கா அறிவிப்பு!

‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

குழப்பம் நீங்கும் விருச்சிகத்துக்கு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT