ஃபிளிப்கார்ட் படம் - DNS
வணிகம்

சுதந்திர நாளையொட்டி ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனை! சலுகைகள் என்னென்ன?

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 - 17 வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 முதல் 17ஆம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடை அணிகலன்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பழைய பொருள்களுக்கு மாற்றாக புதிய மின்னணு சாதனங்களை, பொருள்களை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த சலுகை மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

எவற்றுக்கெல்லாம் தள்ளுபடி

உயர்தர ரகத்தில்..

  • சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா - ரூ. 80,000 கீழ் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஆப்பிள் ஐபோன் 15 - ரூ. ₹60,000க்கு கீழ் விற்பனையாக வாய்ப்பு.

  • சாம்சங் கேலக்ஸி எஸ்24 - வங்கி தள்ளுபடி, வட்டியில்லா தவணை, எக்ஸ்சேஞ்ச் உள்பட.

மத்திய ரகத்தில்...

  • சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ

  • ஓப்போ ரெனோ 14

  • விவோ டி 4 அல்ட்ரா

  • கூகுள் பிக்சல் 8ஏ

இவை அனைத்துக்கும் சிறப்புத் தள்ளுபடி, வங்கிக் கடன் அட்டை சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளது.

இவை தவிர...

  • ஸ்மார்ட் டிவி, வீட்டு பொழுதுபோக்கு சாதனங்கள்

  • வீட்டு உபயோகப் பொருள்கள்

  • வீட்டு உபயோக மின்னணு பொருள்கள்

  • ஆடை, அழகு சாதன பொருள்கள்

ஃபிளிப்கார்ட் தளத்தில் சில வங்கிகள் தங்கள் கடன் அட்டைகளுக்கான சலுகைகளை ஏற்கெனவே அறிவித்துள்ளன. இவை வங்கிகளைப் பொருத்து மாறுபடும். ஃபிளிப்கார்ட் சலுகையை பயனர்கள் பயன்படுத்தி பெரிய அளவிலான சேமிப்பிற்கு தயாராக வேண்டும் என ஃபிளிப்கார்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க | அமேசானில் ரூ. 32,780-க்கு ஐபோன் 15 வாங்கலாம்! ரூ. 47,120 தள்ளுபடி பெறுவது எப்படி?

Flipkart Independence Day Sale 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு சம்பவம் அரசு சாா்பில் உரிய நடவடிக்கை: கரூா் ஆட்சியா் விளக்கம்

தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

முதியவரிடம் கைப்பேசிய திருட்டு: இளைஞா் கைது

கல்லிடைக்குறிச்சியில் மீலாது நபி விழா

SCROLL FOR NEXT