Sensex - file picture 
வணிகம்

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 368.49 புள்ளிகள் சரிந்து 80,235.59 ஆகவும், நிஃப்டி 97.65 புள்ளிகள் சரிந்து 24,487.40 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக நிஃப்டி 50 பங்குகள் 24,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து முடிவடைந்தன.

நிலையற்ற வர்த்தகம், உள்நாட்டு மற்றும் அமெரிக்க பணவீக்க தரவுகள் வெளியாகவுள்ள நிலையில், ப்ளூ-சிப் வங்கிப் பங்குகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். இருப்பினும் ஆட்டோ, ஐடி, மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய பங்குகள் வர்த்தர்கள் வாங்கியதால் சந்தையின் இழப்புகளைக் இது வெகுவாக கட்டுப்படுத்தியது.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.2 சதவிகிதம் சரிந்தும், ஸ்மால்கேப் குறியீடு நிலையாக முடிந்த நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 368.49 புள்ளிகள் சரிந்து 80,235.59 ஆகவும், நிஃப்டி 97.65 புள்ளிகள் சரிந்து 24,487.40 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், டிரென்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எச்டிஎஃப்சி வங்கி, எடர்னல், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை சரிந்தும் மாருதி, டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப், டெக் மஹிந்திரா, எம்&எம், என்டிசிபி ஆகிய பங்குகள் உயர்ந்தும் அதே நேரத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ், எச்யுஎல், டிரென்ட், எச்டிஎஃப்சி வங்கி, நெஸ்லே ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

துறை ரீதியாக ஆட்டோ, பார்மா, உலோகம், எண்ணெய் & எரிவாயு, ஐடி, மீடியா குறியீடுகள் 0.3 முதல் 0.7 சதவிகிதம் வரை உயர்ந்தும், ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி, வங்கிகள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் தலா 0.5 சதவிகிதம் வரை சரிந்து காணப்பட்டது.

லாப வீழ்ச்சியால் ஆஸ்ட்ரலின் பங்குகள் 8% சரிந்த நிலையில், திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் லாபம் இரட்டிப்பாக உயர்ந்ததால் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன.

வலுவான முடிவுகளைத் தொடர்ந்து யாத்ரா ஆன்லைன் நிறுவனமானது இன்று இரண்டாவது நாளாக உயர்ந்து 20% வரை உயர்ந்தது.

பாட்டா இந்தியா பங்குகள் 4.5% சரிந்த நிலையில் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் 'வாங்குவதற்கு' ஏற்ற பங்கு என்று பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஹூண்டாய் மோட்டார் பங்குகள் கிட்டத்தட்ட 3% உயர்ந்தன.

182 மெகாவாட் காற்றாலை திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஐனாக்ஸ் கிரீன் பங்குகளின் பங்குகள் 1% உயர்ந்தன.

காலாண்டு லாபம் 93% சரிந்த பிறகு பிரஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 7% சரிந்தன, பிளாக் டீலில் மெடி அசிஸ்ட் பங்குகள் 4.7% உயர்ந்தன.

காலாண்டு லாபம் 45% உயர்ந்த போதிலும் மேன் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 10% சரிந்தன. காலாண்டு லாபம் 36% சரிந்த போதிலும் எஸ்ஜேவிஎன் பங்கு விலை 5% அதிகரித்தது. புதிய ஆர்-32 உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் ஸ்டாலியன் இந்தியா பங்கு விலை 7% உயர்ந்தது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி சரிவுடன் முடிவடைந்தன. ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமாயின.

அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.18 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 66.75 அமெரிக்க டாலராக உள்ளது.

ஸ்டார் சிமென்ட், ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ், எல்இ டிராவென்ஸ் டெக்னாலஜி, கார்ட்ரேட் டெக், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஜெயஸ்வால் நெக்கோ இண்டஸ்ட்ரீஸ், நுவோகோ விஸ்டாஸ், கேஆர்பிஎல், பேடிஎம், ஹிட்டாச்சி எனர்ஜி உள்ளிட்ட 120 பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.1,202.65 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக நாளில் சாந்தி கோல்ட் பங்குகள் 15% உயர்வு!

பாயும் ஒளி... ராஷி சிங்!

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்த கூலி!

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! பதைபதைக்கும் காணொலி | Himachal

SCROLL FOR NEXT