முகப்பு
வணிகம்

வர்த்தக ஒப்பந்த நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

சென்செக்ஸ் 485.35 புள்ளிகள் உயர்ந்து 84,065.75 ஆகவும், நிஃப்டி 173.60 புள்ளிகள் உயர்ந்து 25,867.30 ஆக நிலைபெற்றது.

Updated On : 9 பிப்ரவரி 2026, 5:01 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பொதுத்துறை வங்கிகள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளின் ஏற்பட்ட வலுவான வர்த்தகத்தால், பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 2வது நாளாக தொடர்ந்து உயர்ந்தன.

பங்குச் சந்தை வர்த்தகம், வலுவான நிலையில் தொடங்கியதால் நிஃப்டி 25,900 என்ற அளவில் தொடங்கியது. பிறகு இன்றைய இன்ட்ராடேவில் அதிகபட்சமாக 25,922.25 ஆக சென்று விற்பனை அழுத்தம் காரணமாக 25,850 புள்ளிகள் மேல் சென்றன.

வர்த்தக முடிவில், நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.6%, ஸ்மால்கேப் குறியீடு 2.6% உயர்ந்தன. சென்செக்ஸ் 485.35 புள்ளிகள் உயர்ந்து 84,065.75 ஆகவும், நிஃப்டி 173.60 புள்ளிகள் உயர்ந்து 25,867.30 ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டைட்டன், அல்ட்ராடெக் சிமென்ட், டாடா ஸ்டீல், எடர்னல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், கோட்டக் மஹிந்திரா வங்கி, இண்டிகோ, டிரென்ட், மஹிந்திரா & மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ, சன் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் பவர் கிரிட், என்டிபிசி, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, டெக் மஹிந்திரா, மாருதி சுசுகி இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

நிஃப்டி-யில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டைட்டன், டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் மற்றும் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் மேக்ஸ் ஹெல்த்கேர், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஐடிசி, ஓஎன்ஜிசி மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகள் சரிந்தன.

மீடியா, நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், பிஎஸ்யு வங்கி, பார்மா, ஹெல்த்கேர், உலோகம் உள்ளிட்ட பங்குகள் 1 முதல் 3% வரை உயர்ந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கைகளில், காலாண்டு லாபம் 24% உயர்ந்ததையடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் 7.5% உயர்ந்தன. அபெக்ஸ் ஃப்ரோசன் ஃபுட்ஸ் மற்றும் அவந்தி ஃபீட்ஸ் பங்குகள் 7 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்தன.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிக்கான வரி விலக்கு அளிக்கப்பட்டதால் வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் பங்குகள் உயர்ந்தன.

எஸ்பிஐ, எம்ஆர்பிஎல், பாங்க் ஆஃப் இந்தியா, ஜிஇ ஷிப்பிங், பாரத் ஃபோர்ஜ், ஃபோர்ஸ் மோட்டார்ஸ், நவின் ஃப்ளோரின், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஏபிஎல் அப்பல்லோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல், நைகா, செயில் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

summary

Benchmark equity indices Sensex and Nifty extended their gains for the second straight session on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.