FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1%க்கும் மேல் உயர்வு!

சென்செக்ஸ் 1,073.61 புள்ளிகள் உயர்ந்து 76,488.96 புள்ளிகளிாவும், நிஃப்டி 312.40 புள்ளிகள் உயர்ந்து 24,031.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

மும்பை பங்குச் சந்தை - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை குறித்த நம்பிக்கை அதிகரிப்பு, உலகளாவிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து நிறவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,143.72 புள்ளிகள் உயர்ந்து 76,559.07 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,073.61 புள்ளிகள் உயர்ந்து 76,488.96 புள்ளிகளிாவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 312.40 புள்ளிகள் உயர்ந்து 24,031.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் குறியீட்டில் பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ, எச்.டி.எஃப்.சி வங்கி, எடர்னல், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எல்&டி, மேக்ஸ் ஹெல்த்கேர், ஓ.என்.ஜி.சி, ஹிண்டால்கோ இதற்கு மாறாக, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிந்தன.

Advertisement

Advertisement

நிஃப்டி குறியீட்டில் ஐஷர் மோட்டார்ஸ், லார்சன் & டியூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் மேக்ஸ் ஹெல்த்கேர், ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.9 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 1.3 சதவீதமும் உயர்ந்தன.

எண்ணெய் மற்றும் எரிவாயு, வாகனத் துறை, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய அனைத்துத் துறைசார் குறியீடுகளும் 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்து, ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இந்திய ரூபாய் தனது ஏற்றப் போக்கை தொடர்ந்து 3வது வர்த்தக அமர்வாக நீட்டித்தது. கடந்த வாரம், வெள்ளிக்கிழமை அன்று, வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ. 95.23 என்ற நிலையில் நிலைபெற்றது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், அதிபர் டிரம்ப் இதில் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையையே கடைப்பிடித்து வரும் நிலையில், அவர் எப்போதும், சாதகமற்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரைவில் ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக பங்குச் சந்தை வலுவான போக்கை கைப்பிடித்தது. இருப்பினும், இத்தகைய நிகழ்வுகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதால், நம்பகத்தன்மை குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.

ஆசியச் சந்தைகளில், ஜப்பானின் நிக்கி 225 குறியீடும், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில், விடுமுறை நாட்கள் காரணமாக தென் கொரியா மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தை மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமானது. அமெரிக்க சந்தை வெள்ளிக்கிழமையன்று உயர்ந்து நிறைவடைந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 4,440.47 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

பங்குகளின் செயல்பாட்டைப் பொறுத்தவரை, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸின் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 2,597 கோடியாகக் குறைந்ததாக நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்கு 1% சரிந்தன. ஐஷர் மோட்டார்ஸ் 4வது காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 11.6% வளர்ச்சியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 6% உயர்ந்தன. ஹைதராபாத் மெட்ரோ திட்டத்திற்காக ரூ. 13,527 கோடி மதிப்பிலான மறுநிதியளிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ஐஆர்எஃப்சி நிறுவனத்தின் பங்குகள் 2.4% வரை உயர்ந்தன.

எச்எஃப்சிஎல், ஜேபி கெமிக்கல்ஸ், ஏஞ்சல் ஒன், வோடஃபோன் ஐடியா, பாலிகேப், மனாப்புரம் ஃபைனான்ஸ், ஆனந்த் ரதி, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், ஜிஇ வெர்னோவா, அப்பல்லோ மருத்துவமனைகள், கிளாண்ட் பார்மா, வருண் பெவரேஜஸ், பஜாஜ் ஆட்டோ, டிம்கென், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.

சர்வதேச எண்ணெய் விலை 5.52 சதவீதம் சரிந்து பேரல் ஒன்றுக்கு ரூ. 97.82 டாலராக உள்ளது.

summary

Benchmark equity indices Sensex and Nifty surged over 1 per cent on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments