வெறும் ரூ.59,990 விலையில் ஒரே சார்ஜிங்கில் 100 கி.மீ. செல்லும் ஜெலோ நைட் பிளஸ் என்ற மின்சார ஸ்கூட்டரை ஜெலோ நைட் பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 1.8 கிலோ வாட் ஹவர் எல்எப்பி பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதை தனியாக கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலான லித்தியம் கையடக்க பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 100 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். மேலும், 1.5 கிலோ வாட் மோட்டார் உள்ளது.
விலை: எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59,990
அதிகபட்ச வேகம்: மணிக்கு 55 கி.மீ.
மைல்லேஜ்: ஒருமுறை சார்ஜிங்கிற்கு 100 கி.மீ.
சிறப்பம்சங்கள்: ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லேம்ப்கள், யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட்கள் உள்ளன.
வண்ணங்கள்: வெள்ளை, மஞ்சள், சிவப்பு.
ஜெலோ எலக்ட்ரிக் டீலர்ஷிப்களிடம் முன்பதிவுகள் நடைபெற்றுவருகின்றன. டெலிவரி வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதியில் இருந்து துவங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.