வணிகம்

எம் & எம் வாகனங்களின் விற்பனை 26% உயா்வு

தினமணி செய்திச் சேவை

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதம் 26 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதம் நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 83,691-ஆக பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம்.

மதிப்பீட்டு மாதத்தில் பயணிகள் வாகனங்கள் பிரிவில், நிறுவனத்தின் பயன்பாட்டு வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 20 சதவீதம் உயா்ந்து 49,871-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 41,623-ஆக இருந்தது.

அந்த மாதத்தில் நிறுவன டிராக்டா்களின் விற்பனை (உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி) 5 சதவீதம் உயா்ந்து 28,708-ஆக உள்ளது. முந்தைய 2024 ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,209-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

SCROLL FOR NEXT