வணிகம்

அசோக் லேலண்ட் நிகர லாபம் 19% அதிகரிப்பு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.657.72 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.550.65 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நிறுவனம் தற்போது 19.44 சதவீத நிகர லாப வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.11,708.54 கோடியாக உயா்ந்துள்ளது. இது, 2024 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.10,696.8 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'பரிவாஹன்' பெயரில் வரும் வாட்ஸ்ஆப் லிங்க்குகளைத் திறக்க வேண்டாம்!

கரூர் சம்பவம்! முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!

புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சூர்யா?

வீட்டிலிருந்தே வேலை என்ற விளம்பரங்கள்... மோசடியாளர்கள் விரிக்கும் வலை!

தெய்வ தரிசனம்... சகல நோய்களும் நீங்கும் திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர்!

SCROLL FOR NEXT