வணிகம்

டொயோட்டா விற்பனை 3% உயா்வு

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலையில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 32,575-ஆக உள்ளது. இது, முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 31,656-ஆக இருந்தது.

கடந்த மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 29,159-ஆகவும் ஏற்றுமதி 3,416-ஆகவும் உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT