ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஆக. 18) அறிமுகமாகியுள்ளது. எனினும், இதன் விற்பனை ஆக. 20ஆம் தேதி முதல் தொடங்கும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹானர் நிறுவனக் கிளைகளிலும், இணைய விற்பனை தளங்களிலும் ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹானர் நிறுவனம் புதிதாக
ஹானர் எக்ஸ் 7 சி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அலுமினியம் சிலிகேட் உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால், மற்ற ஸ்மார்ட்போன்களில் இருந்து முற்றிலும் தரத்தில் மேம்பட்டதாக இருக்கும் என ஹானர் கூறுகிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஹானர் எக்ஸ் 7சி ஸ்மார்ட்போனில் பேட்டரி முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதில், 5200mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 35W திறன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 59 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கலாம்; 46 தொடர்ந்து அழைப்புகளைப் பேசலாம் என ஹானர் கூறுகிறது.
அல்ட்ரா பவர் சேவிங் அம்சத்தில் (2% சார்ஜ் இருக்கும்போது கூட) 75 நிமிடங்களுக்கான அழைப்புகளைப் பேச முடியும் என நம்பிக்கை அளிக்கிறது.
ஸ்நாப்டிராகன் 4 இரண்டாம் தலைமுறை புராசஸர் கொண்டது. மேஜிக் ஓஎஸ் 8.0 என்ற இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது.
நீர் புகாத்தன்மை மற்றும் தூசி படியாதன்மைக்காக IP64 திறன் வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் 50M முதன்மை கேமரா கொண்டுள்ளது. 2MP டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 மடங்கு ஜூம் செய்துகொள்ள முடியும். செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 5MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
8GB உள் நினைவகத்துடன் 8GB மெய்நிகர் நினைவகம் (virtual RAM) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் 16GB உள் நினைவகம் கொண்டது. 256GB நினைவகம் உடையது.
பச்சை மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.