மும்பை: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த நம்பிக்கை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களுக்குப் பிறகு இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவடைந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் கூடுதல் வரிகள் குறித்த கவலைகள் தளர்த்தப்பட்டதால், ரூபாய் நேர்மறையாக வர்த்தகம் ஆவதாக எதிர்பார்க்கப்படுவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.24 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.31 முதல் அதிகபட்சமாக ரூ.86.92 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99ஆக நிறைவடைந்தது.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ.87.39 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!
The rupee appreciated 40 paise to close at 86.99 against the US dollar on Tuesday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.