விவோ ஒய் 500 ஸ்மார்ட்போன் சீனாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது வெளியாகவில்லை என்றாலும், சீனாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணம், ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத வகையில் 8200mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.
பயனர்களின் முக்கியமான குறைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அதிக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் வேகமான புராசஸர்களுக்கு ஏற்ப நீடித்த திறனுடன் விவோ ஒய் 500 அறிமுகமாகியுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம், இந்திய சந்தைகளில் நம்பகத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. இதனால், விவோ தயாரிப்புகளுக்கு இந்திய பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
விவோ ஒய் 400 ஸ்மார்ட்போன், 8200mAh பேட்டரி திறன் உடையது.
டைமன்சிட்டி 7300 புராசஸர் கொண்டது.
தொடுதிரை சுமுகமாக இயங்கும் வகையில், 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்தியாவில் சில மாற்றங்களுடன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.