ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர் பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.
ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ் 3டி ஆடியோவை வழங்கும் வகையில், 360 டிகிரி கோணத்திலும் ஒலியலைகளை கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான மின்னணு சாதனங்களை தயாரித்து வருகிறது.
அந்தவகையில், தற்போது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
நீலம் மற்றும் சாம்பல் என இருவேறு வண்ணங்களில் உருவாகின்றன.
வயர் இல்லாத இயர்பட்ஸில் இதுவரை இல்லாத வகையில், அதிக பேட்டரி திறன் கொண்டது. 1000 முறை வரை சார்ஜிங்கில் எந்தவித மாற்றங்களுமின்றி பேட்டரி திறன் நீடிக்கும்.
தூசி படியாத வகையில் IP55 திறன் கொண்டது.
டைட்டானிக் முலாம் பூசப்பட்ட 12.4 மி.மீ விட்டமுடையது.
சினிமா தியேட்டரின் அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் 3டி ஆடியோ மற்றும் 360 கோணத்தில் ஒலி அலைகளை ஏற்படுத்தும்.
புற ஒலிகளை நீக்கி, தெளிவான ஒலி அலைகளை பயனர்களுக்குக் கொடுக்கும்.
இதன் விலை ரூ. 1799. ஆனால், சில வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1,599 வரை சலுகை உள்ளது.
இதையும் படிக்க | இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.