PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 12 காசுகள் சரிந்து 87.68 ஆக நிறைவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 12 காசுகள் சரிந்து 87.68 ஆக நிறைவடைந்தது.

இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரியை அமல்படுத்தும் திட்டங்கள் குறித்த வரைவு அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டதைத் தொடர்ந்து, உள்ளநாட்டு பங்குச் சந்தையில், பரவலான விற்பனை அழுத்தம் காணப்பட்டது.

ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவிகித கூடுதல் அமெரிக்க வரி விதிக்கப்படுவதால், இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஏற்பட்டதால், இந்திய ரூபாயின் மதிப்பானது தனது வேகத்தை இழந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.74 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.87.63 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.87.80 ஐ தொட்ட நிலையில், முடிவில் 12 காசுகள் சரிந்து ரூ.87.68-ஆக முடிந்தது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 4 காசுகள் குறைந்து ரூ.87.56 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT