சீன அறிதிறன் சாதனத் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், இந்தியாவில் தனது கைக்கணினிகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒன்பிளஸ் கைக்கணினிகளை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். இதற்காக மின்னணு சாதன உற்பத்தி மற்றும் சேவை நிறுவனமான பகவதி புராடக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.
ஏற்கெனவே நிறுவனத்தின் அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரித்துவரும் அந்த நிறுவனம், இந்த புதிய ஒப்பந்தத்தின்கீழ் ஒன்பிளஸ் கைக்கணினிகளையும் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. உள்நாட்டுக்கு ஏற்றவகையில் அந்தத் தயாரிப்புகளை மாற்றியமைக்கும் பணியையும் பகவதி புராடக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.