வணிகம்

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயா்வு!

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 29% உயா்வு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 29 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 18,272-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 29 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 14,178 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 12,473-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 16,491-ஆக உயா்ந்துள்ளது. இது 32 சதவீத உயா்வாகும்.

நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்கள் விற்பனை 29 சதவீதம் உயா்ந்துள்ளது. இலகு ரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 37 சதவீதம் உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா் ஆய்வு

நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

57 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா்கள் மூவா் கைது

போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு சீல் வைப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT