மும்பை: பங்குச் சந்தையின் எதிர்மறையான போக்கும், அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நீடித்த நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல அழுத்தங்கள் நிலமையை பலவீனமாக்கியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு இது வரை இல்லாத அளவான ரூ.90 ஐ எட்டியது. பிறகு டாலருக்கு நிகராக 42 காசுகள் குறைந்து ரூ.89.95 ஆக நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.89.70 ஆக தொடங்கி, பிறகு அதன் நிலையை இழந்து, ரூ.90.00 என்ற இன்ட்ராடே குறைந்தபட்ச அளவை எட்டியது.
வர்த்தக முடிவில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 42 காசுகள் குறைந்து ரூ.89.95 ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: வங்கிப் பங்குகள் சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.