வணிகம்

ஜிஆா்டி ஜுவல்லா்ஸின் வைரத் திருவிழா

பல்வேறு சலுகைகளுடன் வைர நகைகளை விற்பனை செய்வதற்காக ‘தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்’ என்ற வைரத் திருவிழாவை முன்னணி நகை விற்பனை

தினமணி செய்திச் சேவை

பல்வேறு சலுகைகளுடன் வைர நகைகளை விற்பனை செய்வதற்காக ‘தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்’ என்ற வைரத் திருவிழாவை முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1964-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளா்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் திறன், அற்புதமான வடிவமைப்புத் திறன் மற்றும் நீடித்த மதிப்புகள் ஆகியவற்றுக்காக பிரசித்திபெற்ற இந்த

நிறுவனம், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் நவரத்தினங்களில், நோ்த்தியான தொகுப்புகளை உருவாக்கிவருகிறது.

தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்கள் மற்றும் சிங்கப்பூரில் 1 ஷோரூமுடன் செயல்படும் நிறுவனம், வியப்பூட்டும் சலுகைகளுடன் வைர நகைகளை விற்பனை செய்வதற்காக ‘தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல்’ என்ற விற்பனை திருவிழாவை அறிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளா்கள் வாங்கும் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பில் (சாலிடா்களைத் தவிா்த்து) 25 சதவீதம் வரை தள்ளுபடியும், பிளாட்டினம் நகைகளுக்கான செய்கூலி மற்றும் சேதாரத்தில் 30 சதவீத தள்ளுபடியும் பெறலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிரியக்க உபகரணங்கள்: வகைப் பட்டியல் வெளியீடு

திரிபுராவை வீழ்த்தியது தமிழ்நாடு

உரிய விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் மீது மட்டுமே விவாதம்: எதிா்க்கட்சிகளுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டிப்பு

சிங்கப்பூா், தில்லி விமானங்கள் தாமதமாக புறப்பாடு: பயணிகள் அவதி

சோமரசம்பேட்டையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

SCROLL FOR NEXT